Wednesday 2 July 2014

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 [ வலைச்சரம்-02 ]

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

வலைச்சரம் மூலமாக வலைத்தளங்களை அறிமுகம் செய்யும் பணி துவங்கிவிட்டது. இலங்கை வலைத்தளங்களையும் குறிப்பாக மலையகம் பற்றிய வலைத்தளங்களையும் அறிமுகம் செய்யும் குறிக்கோளுடன் அடியெடுத்து வைத்த எனக்கு சாதகமான விளைவைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கிறது.

வலைச்சரம் - 02.
 
இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01

இலங்கையைப் பொருத்தவரை மலையகத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உண்டு. தமிழகத்துடன் மிக நெருங்கிய தொப்புள்கொடி உறவைக் கொண்டது மலையகம். சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த உறவுகள் தான் இன்றைய இந்திய வம்சாவளி மக்கள் என குறிப்பிடப்படும் மலையகத் தமிழர்கள். இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை , தேயிலைப் பயிர்ச்செய்கை மற்றும் இரயில் பாதை அமைத்தல் , உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்டனர். இன்றும் அடிமைகள் போலவே நடத்தப்படுபவர்கள். உலகினால் அதிகம் அறியப்படாதவர்கள். ஈழத் தமிழர்கள் பற்றிக் கூற வேண்டியதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே என்று உலகம் கூறும் அளவுக்கு உலகின் கருணைப் பார்வைக்கு உட்பட்டிருப்பவர்கள். இன்று இரு சமூகங்களுமே இலங்கை அரசின் இரும்புப் பிடிக்குள்..

 

"வலைச்சரம்" இல் இப்பதிவுக்கு கருத்துரை வழங்கியுள்ள தமிழக நண்பர்களின் கருத்துரைகளை வைத்துப் பார்க்கிறபோது மேற்படி கூற்று உண்மைதான் என்று உறுதி செய்யக்கூடியதாகவுள்ளது. கவலைதரும் செய்தி தான். ஆனால் துவண்டுவிடாமல் மலையகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும். வலைச்சரத்தில் இப்பதிவுக்கான உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

நன்றிகளுடன்,

சிகரம்பாரதி.

1 comment:

  1. வணக்கம்
    ஐயா.

    நானும் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவன் இருந்தாலும் அறியாத வலைப்பூக்களை அறிமுகம் செய்து வைத்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா தங்களின் பணிசிறக்க எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete