Monday 7 July 2014

உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே!


உங்கள் அனைவரிடமும் ஓர் உதவி கேட்டு வந்திருக்கிறேன். அவசர உதவி. அதிலும் உதவியை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறேன். முதலாவது எல்லோரும் செய்யக் கூடியது. இரண்டாவது இயலுமானவர்கள் மனமிருந்தால் செய்யக் கூடியது. சரி. உதவி கோருவதற்கான காரணம்? காரணம் - இதுதான்.

எனது சகோதரன் [தம்பி] ஆகிய ஜனார்த்தனன் எதிர்வரும் 14  திகதி [ வரும் திங்களன்று ] இந்தியாவுக்கு மேற்படிப்புக்காக  செல்கிறார். இந்திய கலாசார மத்திய நிலையம் [ ICCR ] வழங்கும் புலமைப்பரிசில் வாயிலாக புனே [ PUNE ] பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வாய்ப்புக் கிட்டியுள்ளது. இப்போது அதற்கான பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். 2014.07.14 காலை இந்தியன் ஏர்லைன்ஸ் இல் பயணமாக பணிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

இனி முதலாவது உதவி. இது தகவல் உதவி. ஆம். எனக்கு தேவைப்படும் சில தகவல்களைப் பெற சில கேள்விகளை உங்கள் முன் வைக்க எதிர்பார்க்கிறேன். அவற்றுக்கு தக்க பதில் வழங்கி உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


இயலுமானவர்கள் இப்பதிவை உங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தகவல் திரட்டி இதோ:

01. புனே [ PUNE ] பல்கலைக்கழகம் குறித்த உங்கள் கருத்து என்ன?

02. அது அமைந்துள்ள இடம், இடத்தின் தன்மை, ஆட்சி - அரசியல் நிலவரங்கள் என்ன?

03. வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு பிரச்சினை நேருமானால் அதனை கையாள்வதற்கான விசேட நெறிமுறைகள் ஏதேனும் உள்ளனவா?

04. இந்தியாவில் பாவிப்பதற்கு உகந்த சிறந்த "சிம் [SIM CARD ] அட்டை " எது?

  1. இணையப் பாவனை 
  2. ரோமிங் அழைப்புகள் 
  3. இலங்கைக்கான வெளிச்செல்லும் அழைப்புகள் 
  4. உள்நாட்டு [ இந்தியா ] அழைப்புகள் 
05. புனே [ PUNE ] பல்கலைக்கழகத்தில் நீங்கள் அறிந்த யாரேனும் கல்வி கற்கின்றனரா?

06. அவருக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள்?

இரண்டாவது பணம் சார்ந்தது. யாரும் ஓடி விடாதீர்கள். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இன்னாரிடமிருந்து தேவை என்று சுட்டிக்காட்டாவ் போவதுமில்லை. பண உதவி செய்ய இயலுமானவர்கள் நீங்களாக இருந்தால் உங்கள் உள்ளம் இடம் கொடுத்தால் மட்டும் உதவி செய்யுங்கள்.

முதற்கட்ட செலவாக வங்கிப்புத்தகத்தில் ரூ 25,000 , விமானப் பயணச்சீட்டு ரூ 18,000 மற்றும் இதர செலவுகள் என இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ 50,000 வரையில் தேவைப்படுகிறது. இதில் எங்களால் இயன்ற சிறிதளவு தொகையை சேகரித்திருக்கிறோம். மிகுதித் தொகைக்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள்.

இவ்வார இறுதிக்குள் பயணத்துக்காக அவரைத் தயார் செய்ய வேண்டியிருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதனால் வலைத்தள நண்பர்கள் முகம் சுழிக்காமல் உங்கள் வீட்டுப் பிள்ளையாய் எண்ணி உதவி புரிய வேண்டுகிறேன். நண்பர்கள் அனைவரும் நலமே வாழ பிரார்த்திக்கிறேன். மேலதிகத் தகவல்கள் உடனுக்குடன் அடுத்தடுத்த பதிவுகளில்....




மீண்டும் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். இயலுமானவர்கள் இப்பதிவை உங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திக்கும்வரை
அன்புடன்

சிகரம்பாரதி.

1 comment:

  1. தம்பியின் கல்வி தொடர வாழ்த்துகள்
    தமிழக நண்பர்கள் தகவல் தருவர்

    ReplyDelete