Thursday 9 August 2018

கருணாநிதிக்கு இலங்கை அரசியல்வாதிகள் நேரில் அஞ்சலி

முன்னாள் தமிழக முதல்வரும் இலக்கிய வாதியுமான கலைஞர் கருணாநிதி 2018.08.07 அன்று மாலை காலமானார். இவருக்கு இலங்கை அரசியல் வாதிகள் தங்கள் கட்சி சார்பிலும் இலங்கை அரசு சார்பிலும் தங்கள் அஞ்சலியை நேரில் செலுத்தினர். 





மனோ கணேசன், ராதாகிருஷ்ணன், திலகராஜ், வடிவேல் சுரேஷ் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர். 



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆறுமுகன் தொண்டமான், எம். ராமேஸ்வரன், செந்தில் தொண்டமான், பி. இராஜதுரை ஆகியோர் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர். 

#கருணாநிதி #தமிழகம் #இலங்கை #அஞ்சலி #திமுக #தமிழ்_முற்போக்கு_கூட்டணி #இலங்கை_தொழிலாளர்_காங்கிரஸ் 

Wednesday 8 August 2018

ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்துக் கொள்ளட்டுமா ‘தலைவரே’!





எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?


என் உணர்வில், உடலில், ரத்தத்தில், சிந்தனையில், இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று உங்கள் நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா?



95 வயதில்,80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ’நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்டி வைத்து விட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம் சூன் 3 ஆம் நாள் பேசும் போது, ‘உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள்’ என்றேன். அந்த சக்தியையும் பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன்; தருவீர்களா தலைவரே!

அந்தக் கொடையோடு,இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும் இலட்சியங்களையும் வென்று காட்டுவோம்!




கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்.....ஒரே ஒரு முறை ...

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூறாண்டு எங்களை இன-மொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே!

“அப்பா அப்பா” என்பதைவிட,”தலைவரே தலைவரே” என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை, இப்போது ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?

- கண்ணீருடன்
மு.க.ஸ்டாலின் 
2018.08.07 

#கலைஞர் #கருணாநிதி #ஸ்டாலின் #அப்பா #கடிதம் #உடன்பிறப்பு #திமுக #அண்ணா #சமாதி #நினைவிடம் #ராஜாஜி #காமராஜர் #தமிழ் #மக்கள் #நூற்றாண்டு #தலைவர் #சிகரம் 

மறைந்தார் கருணாநிதி!

தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி 2018.08.07 அன்று மாலை 06.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவ மனையில் காலமானார்.



கடந்த பதினோரு நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி சிகிச்சை பலனளிக்கால் நேற்று மாலை காலமானார். 

#கருணாநிதி #திமுக #தமிழகம் #தமிழ்நாடு #அஞ்சலி #Karunanidhi #DMK #TN #TamilNadu #India #RIPKarunanidhi #SigaramINFO 

Tuesday 7 August 2018

தலங்கந்தை புதிய வீடமைப்புத் திட்டம்

லிந்துலை, நாகசேனை, பெர்ஹம் (Ferham) தோட்டம், தலங்கந்தை பிரிவு 

ஆலய புனர் நிர்மாணம் 









தேயிலைத் தோட்டம் 





புதிய தனி வீட்டுத் தொகுதி நிர்மாணப் பணிகள் 





















தற்போது மலையகத்தில் 200 வருட லயன் வீட்டுத் தொகுதிகளுக்கு மாற்றாக காணி உறுதிப் பத்திரத்துடன் கூடிய தனி வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பல வீட்டுத் தொகுதிகள் மலையகத்தின் பல பகுதிகளிலும் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. 

லிந்துலை, நாகசேனை, பெர்ஹம் (Ferham) தோட்டம், தலங்கந்தை பிரிவில் 20 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. இன்னும் சில வீடுகள் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன. 

இந்த தனி வீட்டுத் தொகுதியானது தற்போதைய லயன் குடியிருப்புகளில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பழைய குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே புதிய குடியிருப்புகளும் அமைக்கப்படுமானால் மக்களுக்கு அதிக நன்மை பயப்பதாக அமையும். இனி மலையகத்தில் நிர்மாணிக்கப்படப்போகும் வீட்டுத் திட்டங்களுக்கு அரசு இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும். 

- சிகரம் செய்திகள்