Tuesday, 16 September 2014

என்னோடு நான் - சிகரம்பாரதி.

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

                       "சிகரம்பாரதி" ஆகிய என்னை அறிந்தவர்கள் சிலர், அறியாதவர்கள் பலர். பாடசாலைக் காலகட்டத்தில் "சிகரம்" என்ற கையெழுத்து சஞ்சிகை வாயிலாகவும் தொடர்ந்து இலங்கையின் தேசிய நாளேடுகள், சஞ்சிகைகளுக்கும் எழுதி வந்தேன். பின்பு வலைத்தளத்தின் பக்கம் "தூறல்கள்" வலைப்பதிவின் வாயிலாக கால் பதித்தேன். "சிகரம்" வலைப்பதிவின் ஊடாக என்னை நிலை நிறுத்தினேன். இன்று "சிகரம்3" உடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.


                    வலைச்சரம் ஒரு ஆரோக்கியமான முயற்சி. தமிழில் வலைப்பதிவுகளையும் வலைப்பதிவர்களையும் அறிமுகப்படுத்துவதிலும் ஒன்றுபடுத்துவதிலும் வெற்றிபெற்ற முயற்சி. வலைச்சரத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் ஏராளம். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள். அத்தனையும் வலைப்பதிவர்கள் தந்த அறிமுகங்கள்! ஆங்கிலத்தில் கூட இப்படி ஒரு முயற்சி இருக்குமா என்பது சந்தேகமே!

                   வலைச்சரத்தில் மூன்று முறை அறிமுகம் பெற்றுள்ளேன். இன்று வலைச்சரத்தில் ஆசிரியராக... நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு அழைப்பு வர சில தினங்களுக்கு முன்னதாகத்தான் மனதினுள்ளே 'வலைச்சர ஆசிரியப் பொறுப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்' என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அழைப்பு வந்ததும் நினைத்ததும் நடந்துவிட்டதே என்று ஆச்சரியமாக இருந்தது.

                  பணி நெருக்கடி மற்றும் சில சிக்கல்கள் காரணமாக முறையான தயார்படுத்தல்கள் ஏதும் என்னிடம் இல்லை. அதற்காக ஏனோ தானோ என்று எழுதப்போவதுமில்லை. ஏனையோரை விட வித்தியாசமான முறையில் எனது அறிமுகங்கள் இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

               முதலில் எனது வலைத்தளங்களில் நான் எழுதிய நட்சத்திரப் பதிவுகள் சிலவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

> வலைச்சர ஆசிரியப் பணி குறித்து எழுதியது:
   * வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!

"சிகரம்" வலைத்தளம்.
* எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல

* வேலைக்கு போறேன்!

* கற்பிழந்தவள்

* பிரிவோன்றே முடிவல்ல

* கவிதைகள்

* #100 மகிழ்ச்சியான நாட்கள்

* மீண்டும் அதிசயா

* அகவை ஒன்பதில் சிகரம்!

* கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல்    

இவை மட்டுமல்ல இன்னும் பல பதிவுகள் இருக்கின்றன. ஒரு முறை எனது வலைத்தளம் சென்று பாருங்களேன்!

மேலும் எனது "தூறல்கள்" மற்றும் "சிகரம்3" வலைத்தளங்களிலும் பல்வேறு பயனுள்ள பதிவுகளைக் காணலாம். ஒரு வலைப்பதிவை தொடர்ந்து நடாத்துவது என்பது மிகச் சிரமமான பணி. அப்பணியை முன்கொண்டு செல்வதில் நாமனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம் . எத்தனை இடர்கள் வந்தாலும் இப்பணியை தொடர்ந்து செய்ய முன்வருமாறு தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். மேலும் வலைப்பதிவர்கள் ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களைக் குறைத்து "இயன்றவரை தமிழ்" என்ற கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


மீண்டும் நாளை முதல் வலைப்பதிவு அறிமுகங்களுடன் சந்திக்கலாம்.

அதுவரை
அன்புடன்

சிகரம்பாரதி. 

நன்றி : வலைச்சரம்.

இப்பதிவு "வலைச்சரம்" தளத்தில் 30.06.2014 அன்று என்னால் எழுதி வெளியிடப்பட்டதாகும்.

-நன்றி-

Friday, 12 September 2014

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 2014

தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

Friday, 5 September 2014

சிகரம் - வலை மின்-இதழ் - 004

சிகரம் வலை மின்-இதழ் - 004

வெள்ளி மலர்   - 2014.09.05

சிறு குறிப்பு: 

வணக்கம் வாசகர்களே! நான்காவது  இதழையும் உங்கள் வீட்டுக் கணினிகளில் காட்சிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்னும் சிறப்பாக இதனைக் கொண்டு செல்வதற்கு உங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சஞ்சிகை

ஞானம் - இதழ் 171 - இலங்கை சிற்றிதழ் - ஆகஸ்ட் 2014
கலை இலக்கிய மாதாந்த சஞ்சிகை. மின் நூலாக தரவிறக்கிப் [PDF] படித்து மகிழுங்கள்.

தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014


விபரங்கள் : தீபாவளிக் கவிதைப் போட்டி - 2014  

சிறுகதைப் போட்டி 

அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2014.

கருத்துக்களம் 

இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!

புரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க?      


நிகழ்வுகள்   

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - மதுரை - 26.10.2014      

இந்நிகழ்வு குறித்து "மின்னல் வரிகள்" தளத்தில் வெளியான பதிவு:

அஞ்சல் பதிவு - இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள்..!    

அஞ்சல் பதிவு - ஆன்மீகம்     

மணிராஜ் - திருவருள் அருளும் திருவுரு      

வெள்ளித்திரை     

பயணம் - கோவை ஆவி - ஆவி டாக்கீஸ் - கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்         

தொடர்கதை   

மனசு - தொடர்கதை : கலையாத கனவுகள் - பகுதி 78      


தொடர்புகளுக்கு:

வலை மின்-இதழ் தொடர்பான கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் இவ்விதழில் உங்கள் இடம்பெற விரும்பும் உங்கள் பதிவுகள் என அனைத்தையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : sigaram1@outlook.com . அடுத்த சிகரம் வலை மின்-இதழ் 5 இலும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் 2014 இல் வெளியான வலைத்தளப் படைப்புகள் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படும். உங்கள் படைப்புகள் மற்றும் விமர்சனங்களை அனுப்பும் போது "சிகரம் வலை மின்-இதழ்" என தலைப்பிட்டு அனுப்ப மறவாதீர்கள்.

நீங்கள் அனுப்பும் ஒரு மின்னஞ்சல் மூலம் ஒரு பதிவு மட்டுமே இதழில் இடம்பெறும். தொடரும் இதழ்களிலும் உங்கள் பதிவுகள் இடம்பெற விரும்பினால் இடம்பெற விரும்பும் ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறும் பதிவுகள் 'அஞ்சல் பதிவு' எனக் குறிப்பிடப்படும்.

சந்தா:

பதிவுகளை அனுப்பும் ஒவ்வொருவரும் சந்தாதாரராகக் கருதப்பட்டு வாராவாரம் மின்னஞ்சலில் வலை மின்-இதழின் இணைப்பு அனுப்பப்படும். சந்தாதாரராக விருப்பமில்லை எனில் மின்னஞ்சலில் குறிப்பிட வேண்டும்.

Monday, 1 September 2014

3 வது வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 2014

தமிழ்ப் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்...


கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்புகளை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. விழாவின் இனிய நினைவுகளை நண்பர்கள் பகிர, முதல் ஆண்டில் கலந்து கொள்ள இயலாமல் போன அனேக பதிவர்கள் ஆர்வமுடன் இரண்டாம் ஆண்டின் சந்திப்பில் பங்கேற்று அசத்தினார்கள். அதே போல் மூன்றாம் ஆண்டிலும் அசத்துவதற்கு இப்போதிருந்தே தயாராகுங்கள் நண்பர்களே..!


மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் கோலாகலமாக ஆரம்பித்து விட்டன... சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து மங்காப் புகழ் பெற்ற மதுரை நகரில் இம்முறை நம் மூன்றாமாண்டு சந்திப்பு நடைபெற உள்ளது.


நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை


நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை


இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.


அக்டோபர் 23ம் நாள் உலகெங்கும் மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளித் திருநாள். அதைத் தொடர்ந்து மூன்று தினங்களில் 26ம் தேதியன்று வலைப்பதிவர்களான நம் அனைவருக்குமான மற்றொரு தீபாவளித் திருவிழாவாக அமைய இருக்கிறது இந்தப் பதிவர் சந்திப்பு. அந்தப் பண்டிகையைக் கொண்டாடிய அதே உற்சாகத்தை விடாமல் பற்றிக் கொண்டு, அலைகடலெனத் திரண்டு வந்து மதுரையில் இன்னொரு சித்திரைத் திருவிழா ஆரம்பித்து விட்டதோ என்று மதுரைவாசிகள் வியக்கும் வண்ணம் அசத்த வேண்டும் நாம்... வாருங்கள் வலைப்பதிவர்களே..!


விழா நிகழ்வு என்றும் நினைவில் நிற்கும் ஒன்றாக அமையவும், வேறு சில இனிய ஆச்சர்யங்களை உங்களுக்கு விழா நாளன்று வழங்கவும் மதுரை வலைப்பதிவர்களின் குழு சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கி விட்டனர். இந்த வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி உங்களின் வருகையை உறுதிசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்...

-படிவத்தை மின்னல் வரிகள் வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளவும்-

படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, மேலும் விவரங்கள் தேவைப்பட்டாலோ தொடர்புக்கு:- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com


நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்)திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com


அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.


மேலும் விரிவான தகவல்கள் மற்றும் விபரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடப்படும். பதிவுலக நண்பர்கள் அனைவரும் இந்த விபரங்கள் அனைத்தையும் தங்களது வலைப்பதிவில் எழுதி உங்கள் நட்பு வட்டத்திற்கும், அனைத்து பதிவர்களுக்கும் விஷயத்தை எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்..!


================================================================= விழா நடைபெறும் இடத்தை நான் க்ளிக்கிய படம் இது. இந்த ஹால் விசாலமாகவும் நிறைய ஜன்னல்களுடனும் இருப்பதால் நல்ல காற்றோட்டம். தவிர, விழா நடக்கும் ஹாலைச் சுற்றி அனைத்துப் பதிவர்களும் யானையில் வந்தால்கூட கட்டுவதற்குத் தேவையான அளவு விசாலமான பார்க்கிங் வசதி இருக்கிறது. அதுவும் தவிர, நிழலில் நின்று பதிவர்கள் கலந்துரையாடி மகிழ போதிய இடமும் இருக்கிறது. ஆகவே... அனைவருக்கும் நிறைவைத் தரும் வண்ணம் இந்த ஆண்டின் நிகழ்வுகள் அமையும் என்பது திண்ணம். 
நன்றி: பால கணேஷ்.
பதிவு : இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள் ..!    

வலைத்தள அனுசரணை : சிகரம் வலைத்தளக் குழுமம்.