Wednesday, 20 August 2014

புரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க?

                     அன்பார்ந்த வலைப்பதிவர்களே! நீங்கள் நலமா? நலம், நலமறிய ஆவல். உங்களுக்கு நினைவிருக்கிறதா? சில நாட்களுக்கு முன் உங்கள் அனுபவப் பகிர்வுக்கான பொதுவான களம் ஒன்றை அமைப்பது தொடர்பில் உங்களுடன் நாம் கலந்துரையாடியிருந்தோம். அதனூடாக சில கருத்துக்களை சேகரித்திருக்கிறோம். அக்கருத்துக்களின் படி உங்கள் அனுபவப் பகிர்வுக்கான பொதுவான களம் ஒன்றை அமைப்பது தொடர்பிலான நிபந்தனைகளில் சில மாற்றங்களை செய்வது அவசியமாகிறது. 

              முதலில் , நமது முதலாவது கலந்துரையாடலுக்கான களம் இதோ:

அடுத்த கலந்துரையாடலுக்கு நாம் செல்வோமா?

 

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பொதுவான களம் ஒன்றை - அதாவது - புதிய வலைத்தளம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம். இது தொடர்பிலான புதிய - திருத்தப்பட்ட நிபந்தனைகளும் விதிமுறைகளும் இதோ:

* துவங்கவிருக்கும் புதிய வலைப்பதிவானது உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் மட்டுமே உருவாக்கப்படுகிறது.

* ஒரே வார்த்தையில் சொல்வதானால் உங்கள் "சுயசரிதை"யை எழுதுவதற்கான களம் இது. 


* ஒரு பதிவருக்கு அதிக பட்சம் 15 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதுடன் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்ற அடிப்படையில் அதிக பட்சம் 8 பதிவுகளை வெளியிட முடியும். 


* ஒரு பதிவர் குறைந்த பட்சம் 9 நாட்களில் இரண்டு நாளுக்கு ஒரு பதிவு என்ற அடிப்படையில் 5 பதிவுகளை எழுத வேண்டும். 


* ஒரு பதிவர் தான் எழுதும் அனைத்துப் பதிவுகளும் தொடர் பதிவாக அமையுமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு நாளைக்கு ஒரு வலைப்பதிவில் ஒரு பதிவுக்கு மேல் வெளியிடும் வலைப்பதிவுகளைக் கொண்ட வலைப்பதிவர்களுக்கு இதில் எழுத அனுமதி கிடையாது. காரணம், தினசரி செய்திகளை வெளியிட இணையத்தில் பல நூறு தமிழ் இணையத்தளங்கள் கொட்டிக்கிடக்கும் நிலையில் தினசரி 10 பதிவுகளை வெளியிட்டு அதனை திரட்டிகளிலும் பகிர்ந்து வளரும் பதிவர்களின் பதிவுகளை திரட்டிகளில் தோன்ற விடாமல் செய்வதனால் ஆகும்.

* உங்கள் அனுபவப் பகிர்வினை இப்புதிய தளத்தில் தான் முதலில் எழுத வேண்டும் என்பதில்லை. உங்கள் வலைத்தளத்தில் எழுதி வெளியிட்ட பின் 100 சொற்களுக்குக் குறையாத வகையில் அதன் சாராம்சத்தைக் குறிப்பிட்டு கீழே உங்கள் பதிவுக்கான இணைப்பினை வழங்கலாம். 

* ஆயினும் இணைக்கப்படும் பதிவு புதியதாக இருத்தல் அவசியம். 

* உங்கள் தளத்தில் எழுதி அப்பதிவினை இணைப்பதாக இருந்தாலும் அப்பதிவானது எமது விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் நிபந்தனைக் காலத்தினுள் எழுதப்படுவதாகவும் அமைதல் வேண்டும்.

* இது பிற பதிவர்களையோ அல்லது பதிவுகளையோ அறிமுகப்படுத்தும் தளம் அல்ல.

* உங்களுக்கான ஆசிரியப் பணி குறித்து எங்கள் மின்னஞ்சல் கிடைத்ததும் உங்களுக்கான விருப்பத்தைத் தெரிவித்து உங்கள் அனுபவங்களைப் பகிர முடியும்.

* நீங்கள் எங்கள் அழைப்புக்காக காத்திருக்கத் தேவை இல்லை. உங்கள் விருப்பத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும். அழைப்பு உங்களை நாடி வரும்.

* எமது தளத்தில் முழுமையாக எழுதி வெளியிடப்படும் பதிவினை உங்கள் தளத்தில் உங்களுக்கு விருப்பமான காலப்பகுதியில் வெளியிட்டுக் கொள்ளலாம். ஆனால் எமது தளத்தில் எப்போது வெளியிடப்பட்டது என்ற விவரமும் எமது தளத்தில் உங்கள் பதிவுக்கான இணைப்பும் வெளியிடப்பட வேண்டும்.

* உங்கள் தளத்தில் எழுதி எமது தளத்தில் பதிவுச் சுருக்கத்துடன் வெளியிடப்படும் பதிவாக இருந்தால் தொடர்பதிவின் நிறைவில் உங்கள் தளத்தில் எமது தளத்தில் நீங்கள் வெளியிட்ட பதிவுகளின் இணைப்புகளுடன் அவற்றின் விவரங்களைக் குறிப்பிட்டு தனிப் பதிவொன்றை வெளியிடுதல் வேண்டும்.
 இப்புதிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்த உங்கள் கருத்து என்ன? இப்புதிய வலைப்பதிவுத் திட்டம் தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடனான கலந்துரையாடல்களின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். உங்கள் மனதில் பட்டதை தெளிவாய் இங்கே சொல்லுங்கள். விவாதிக்க நாம் தயாராகவே உள்ளோம்.
உங்களை எழுதுங்கள் .புதுயுகம் படைக்க வாருங்கள். 
-சிகரம்-

3 comments:

  1. சிறந்த முயற்சி
    பாராட்டுகள்

    ReplyDelete
  2. சிறப்பான முயற்சி ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete