Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Monday, 10 September 2018

இலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா?

இலங்கையில் 2019 ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டம் மற்றும் மாகாண சபை எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல் என்பவற்றால் பல மாகாண சபைகள் பதவிக்காலம் முடிவடைந்தும் இன்னும் கலைக்கப்படாமல் உள்ளன. 

இந்த சிக்கல்களை இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிறைவு செய்து 2019 ஜனவரியில் அல்லது முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 



இவ்வாண்டு நடுப்பகுதியில் வாக்காளர் இடாப்பை இற்றைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது வாக்காளர் இடாப்பு பூரணப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் இடாப்பில் உங்கள் விபரங்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கிராம உத்தியோகத்தரிடமோ (GS) அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேருநர் பதிவு விபர வரைவு இணையத்தள பக்கம் ஊடாகவோ சரி பார்க்க முடியும். 

உங்கள் விபரங்களில் தவறுகள் இருப்பதை நீங்கள் கண்டறிந்தால் உரிய காலப்பகுதிக்குள் கிராம உத்தியோகத்தரிடமோ (GS) அல்லது உரிய அதிகாரியிடமோ புகாரளித்து சரியான விபரங்களை மீள் பதிவு செய்துகொள்ள முடியும். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்வோமாக! 

#LKA #lk #lanka #elections #elections2019 #Maithripala #UNP #இலங்கை #தேர்தல்கள் #நல்லாட்சி #மக்கள் #வாக்காளர்பதிவு #செய்திகள் #சிகரம் 

Thursday, 9 August 2018

கருணாநிதிக்கு இலங்கை அரசியல்வாதிகள் நேரில் அஞ்சலி

முன்னாள் தமிழக முதல்வரும் இலக்கிய வாதியுமான கலைஞர் கருணாநிதி 2018.08.07 அன்று மாலை காலமானார். இவருக்கு இலங்கை அரசியல் வாதிகள் தங்கள் கட்சி சார்பிலும் இலங்கை அரசு சார்பிலும் தங்கள் அஞ்சலியை நேரில் செலுத்தினர். 





மனோ கணேசன், ராதாகிருஷ்ணன், திலகராஜ், வடிவேல் சுரேஷ் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர். 



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆறுமுகன் தொண்டமான், எம். ராமேஸ்வரன், செந்தில் தொண்டமான், பி. இராஜதுரை ஆகியோர் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர். 

#கருணாநிதி #தமிழகம் #இலங்கை #அஞ்சலி #திமுக #தமிழ்_முற்போக்கு_கூட்டணி #இலங்கை_தொழிலாளர்_காங்கிரஸ்