திருப்பதி, திருவண்ணாமலை, காசி, ஹரித்வார், ஆஜ்மீர், மெக்கா, ரோம் என சகல வழிபாட்டுத் தலங்களையும் கற்பனை செய்துபாருங்கள். உலகம் முழுவதுமிருந்து தேசம், சமயம், மொழி, வர்க்கம் ஆகிய எல்லைகளைக் கடந்து கூட்டம்கூட்டமாக எதைத் தேடி இத்திருத்தலங்களுக்கு வருகிறார்கள் மக்கள்?
கிருஷ்ணன், இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம், ராமகிருஷ்ண பரமஹம்சர் எனத் தொடர்ந்து ஞான புருஷர்கள் மக்களுக்கு தேவைப்பட்டபடி இருப்பது ஏன்? இவர்களிடம் எதைத் தேடி மக்கள் செல்கிறார்கள்?
ஆரோக்கியத்திற்காக, வேலை கேட்டு, கடன் சுமை அகல, பிள்ளை வரத்திற்காக, திருமணம் நடைபெறுவதற்காக...
ஞானம் தேடி, மீண்டும் பிறவாப் பெருநிலை வேண்டி, முக்தியை நாடி...
இப்படிப் பல காரணங்களுக்காக இந்த உலகில் எத்தனையோ கோடிப் பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். எண்ணிப்பாருங்கள். எத்தனையெத்தனை வேண்டுதல்கள். அத்தனை மனிதர்களின் அழுத்தங்களையும் தாங்கி, இந்த பூமியை ஓரளவு அமைதியாக்கும் மையங்களாக ஆலயங்கள் இருக்கின்றன.
ஆதிமனிதன் இயற்கையைக் கடவுளாகப் பார்த்தான். இயற்கை தரும் பலன்களைப் பரிசாகவும், துன்பங்களைக் கடவுளின் தண்டனையாகவும் பார்த்தவன். தன்னால் புரிந்துகொள்ள முடியாத இயற்கையையும் தன் வாழ்க்கைச் சூழலையும் அனுசரிக்கவும், சமாளிக்கவும், அச்சமில்லாமல் இருக்கவும் ஆதிமனிதனுக்கு உதவி தேவைப்பட்டது. தன்னை அச்சமூட்டும் சக்திகளிடமிருந்து விடுதலை தேவைப்பட்டது. தன் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு சக்தியிடம்தான் பாதுகாப்புக் கிடைக்கும் என்று நினைத்தான், அதன் காலடியில் சரணடைந்தான். இப்படித்தான் வழிபாடு, பிரார்த்தனை தொடங்கியிருக்க வேண்டும்.
கண்ணுக்குத் தெரியாக அந்த சக்தியைச் சில குறியீடுகள் மூலம் சிலர் உருவகப்படுத்திக்கொண்டார்கள். சிலரோ உருவமற்ற சக்தியையே வணங்கினார்கள்.
நாளடைவில் இதுவும் மாறியது. தன்னை விடவும் சக்தி பொருந்திய மனிதர்களையும் மனிதன் வழிபட ஆரம்பித்தான். கடவுளையோ குருவையோ, சரணடைவது, பூஜிப்பது என்பதாகத் தன் வழிபாட்டை உருவாக்கிக் கொண்டான்.
"ஒட்டகங்களைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! மேலும் வானத்தைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று! மேலும் மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று! மேலும், பூமியைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று!" என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இறைவன், ஒவ்வொன்றையும் படைத்த பின்னர் "அது நல்லது என்று கண்டார்" என்று பைபிள் நம்பிக்கையுடன் கூறுகிறது.
"அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும் இருளிலிருந்து ஒளிக்கும் மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்விற்கும் எம்மை அழைத்துச் செல்க" என்று இந்துக்களின் பிரார்த்தனை அமைகிறது.
"எல்லையதிற் காணுவதில்லை, அலை எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்: ஒல்லெனும் பாட்டினிலே - அம்மை ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்" என்று பாரதியார் இயற்கையின் பிரமாண்ட சப்தத்தை ஓம் என்ற மந்திரமாகக் காண்கிறார்.
இயற்கையின் முழுமையைக் கடவுளாகக் கண்டு வியக்கும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூட, பகுத்தறிய முடியாத புதிரான அனுபவம்தான் இந்த வாழ்க்கையை அழகாக்குவதாகவும், விஞ்ஞானத்துக்கும் கலைக்கும் இந்தப் புதிரே ஆதாரம் என்கிறார்.
மனித மனதில் புதிரும் அச்சமும்நிலையாமை உணர்வும் தொடர்கின்றன. ஆதிமனிதன் முதல் ஐன்ஸ்டீன் வரை இதுதான் நிலை. கை நிறைய காசு இருப்போர் தங்கள் செல்வத்தையும், சமூக அந்தஸ்தையும் பாதுகாக்கும் அச்சத்தில் ஆலயங்களில் திரள்கிறார்கள். வாழ்நாள் முழுக்கப் போராடியும் உணவு, இருப்பிடம், ஆரோக்கியம் என்ற அடிப்படை வசதிகளை அடையவே முடியாத ஏழைகள் தங்கள் துரதிர்ஷ்டத்தைக் களைவதற்கு இறைவனின் பாதங்களில் சரண்புகுகிறார்கள். கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதி மற்றும் தர்க்காக்களிலும் திரளும் கூட்டமே இதற்கு சாட்சி.
"மனிதனின் குறைகளைத் தீர்க்கும் தாய் போன்ற இடமே ஆலயங்கள்" என்கிறார் குமார சிவாச்சாரியார். "கலியுகத்தில் பலவிதமான துன்பங்கள் மனிதனைத் துரத்துகின்றன. அந்தத் துன்பங்களை விலக்கிக்கொள்வதற்கு ஒரு ஆதாரமான இடம் தேவைப்படுகிறது. அந்த இடமே இறைவன் லயமாகி இருக்கும் ஆலயம். அந்த ஆலயத்தை இல்லமாகவும் கொள்ளலாம். ஊர்ப்பொதுவில் இருக்கக்கூடிய ஆலயமாகவும் கொள்ளலாம். அந்த இடத்தில் அதற்குரிய துதிகளைச் சொல்லி நம் வேண்டுதலை நிறைவேற்றுமாறு இறைவனாகிய பிம்பத்தில் வைப்பதற்குப் பெயர்தான் உண்மையான வழிபாடு" என்கிறார்.
இவ்வுலகில் காணும் அனைத்து இடங்களிலும், பொருட்களிலும் கடவுளின் கையொப்பம் இருப்பதாகப் பார்க்கிறது திருக் குரான் .
63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார், வேடனாகத் தன் வாழ்க்கை முறையின் அடிப்படையில் மாமிசத்தை அமுதமாய்ப் படைத்து சிவனை வணங்கிய கதை நம்மில் பலருக்குத் தெரியும். இறைவனை மலரால் வழிபடுவது முதல் மதுவைப் படையல் செய்து வணங்குவதுவரை உலகம் முழுவதும் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன.
இந்து சமயத்தில் ஒவ்வொரு பக்தரும் தனக்கு விருப்பமான ஒரு கடவுள் வடிவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வணங்குகிறார். சிலருக்கு முருகன், சிலருக்கு விநாயகர், சிலருக்கு ஞானிகள்.
இந்து மதத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்து பிரார்த்திப்பதும் மந்திரம் சொல்வதும் சங்கல்பம் என்று அழைக்கப்படுகிறது. கடவுளை மனித உருவாகவே பாவித்து பிடித்த தெய்வத்தை வணங்குவதுதான் ஒரு சாதாரண மனைதரின் வழிபாடாக உள்ளது.
நீராட்டுதல், ஆடை உடுத்தல், வாழ்த்துக் கூறல் (பூஜை), ஆபரணம் அளித்தல், பிரசாதம் படைத்தல், விளக்கொளி காட்டுதல், விடைகொடுத்தல் என்பதாகக் கடவுளைப் பிரார்த்தித்தல் இருக்கிறது.
மனிதன் கடவுள் முன்னால் தன்னைச் சிறிய உயிராக அகந்தையை சரண்செய்து அர்ப்பணிப்பதுதான் வழிபாடு என்கிறார் இஸ்லாமிய அறிஞர் மௌலவி அ.மு.கான் பாகவி. "இஸ்லாம் கூறும் அனைத்து வழிபாடுகளிலும் ஒரு அடிப்படை மெய்யியல் மறைந்திருக்கும். அல்லாஹூ அக்பர் என்று சொல்லி ஒரு முஸ்லிம் தொழுகையைத் தொடங்கும்போதே, நான் பெரியவன் அல்லன், எனது ஆஸ்தி பெரியதன்று; என் பட்டங்களோ பதவிகளோ பெரியவை அல்ல என்பதற்குத் தொழுகை செய்பவர் வாக்குமூலம் அளித்துவிடுகிறார்" என்கிறார்.
நம் காலத்தில் இறைவழிபாடு என்பது வெறுமனே சடங்குகளாகவும்,சம்பிரதாயங்களாகவும், வசதியுள்ளவர்களின் அந்தஸ்தைக் காட்டுவதாக மாறிவிட்டதையும் பார்த்துவருகிறோம். ஜென் தத்துவ ஞானிகளில் ஒருவரான சோட்டோ ஜென், தர்மம் மற்றும் சக உயிர்கள் மீதான கருணையையே பிரார்த்தனை என்று கூறுகிறார். பலவீனமான உயிர்கள் வதைபடும் இடத்தில் அவற்றைக் காப்பாற்றும் வலிமையைத் தனக்கு அளிக்கவேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருக்கவேண்டும் என்கிறார். கடவுள் வழிபாட்டின் முக்கிய நிலைகளாக வள்ளலாரும் இதையே குறிப்பிடுகிறார். எல்லா உயிர்களும் இறைவன் வாழும் நிலையங்கள் என்று எண்ணி அவற்றுக்குத் தொண்டு புரிந்து வாழ்வதே இறைவழிபாடு என்கிறார் அவர்.
பிரார்த்தனையை மனிதர்கள் சேர்ந்து வாழும் கூட்டுவாழ்க்கை நெறியாகவும், தன்னை விட எளிய மனிதர்கள் மீது கொள்ளும் பரிவாகவும் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த அருட்தந்தை ரிக்கோ பார்க்கிறார்.
"வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சாதாரண மக்கள் தம்மை வழிநடத்துகிற இறைசக்தியும் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காக்க வேண்டி வழிபடுவார்கள். தேவாலயங்களில் இறைவனிடம் தங்கள் குறைகளை முன்வைப்பார்கள். இன்னும் சிலர் பைபிளை ஆழமாகப் படித்துப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுவார்கள். வேறு சிலரோ கடவுளின் வார்த்தைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பார்கள். தர்மகாரியங்களில் ஈடுபடுவார்கள். அனாதைகளுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இவையும் வழிபாட்டின் வடிவங்கள்தான். என்கிறார்.
அண்டை வீட்டானை நேசி என்று இயேசுபெருமானும் சொல்வது இதைத்தான்.
எதையுமே வேண்டிக்கொள்ள வேண்டாம், இறைவனைப் பற்றிய எண்னத்தில் மூழ்கித் தன்னைக் கரைத்துக்கொள்வதே பேரானந்தம் என்ற அணுகுமுறையும் பிரார்த்தனையில் ஒன்று. "வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுவதும் தருவோய் நீ" என்றார் மாணிக்கவாசகர். இறைவனை வழிபடுவதால் கிடைக்கும் சுவை ஒன்றே போதும், இந்திர லோகம் ஆளும் பதவி உள்பட எதுவுமே வேண்டாம் என்கிறார் பெரியாழ்வார்.
எதையுமே வேண்டாத இந்தப் பிரார்த்தனை ஆன்மிக உணர்வின் உச்சம். சாதாரண மனிதர்களுக்கு அது சத்தியப்படாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறாதபோதும் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
பிரார்த்தனையே ஒரு தீர்வு என்பதுதானே? மனமுருகி வழிபடுவதே மன நிம்மதி தருகிறது என்பதால்தான் உலகம் முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
வழிபாட்டின் பலன் அல்ல, வழிபாடே மனிதர்களைக் காக்கும் கவசமாக இருக்கிறது.
பெட்டிச் செய்தி
உளவியல் என்ன சொல்கிறது?
வழிபாட்டுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் குறித்துச் சொல்கிறார் திருச்சி விஷ்ராந்தி மனநல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஆர். குமார்.
‘நாம் எலிகளின் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். குதிரைப் பந்தயமாக இருந்தால் அதில் ஒழுங்கும், வரைமுறையும் இருக்கும். எலிகளின் பந்தயம் அப்படி இல்லை. ஒன்றைக் கொன்றுதான் ஒன்று வெல்லும். நாமும் அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். வல்லவன் மட்டுமே ஜெயிக்க முடிகிறபோது அடுத்தவர் மீது நம்பிக்கை வைப்பது குறைகிறது. யாரையுமே நம்ப முடியாத நிலையில் ஏதாவது ஒருவர்மேல் நம்பிக்கை வைப்பது அவசியமாகிறது. அங்கேதான் கடவுள் அவசியமாகிறார்.
நன்றி : தி.இந்து நாளிதழ்.
இணைப்பு : ஏன் வேண்டும் வழிபாடு?

எதிலுமே நினைத்தது கிடைக்காத ஏமாற்றமும் இயலாமையும் மக்களுக்குப் பழகிவிடுகிறது. இந்தப் பழக்கப்படுத்தப்பட்ட இயலாமை, மக்களை அசாத்திய சக்தி மீது நம்பிக்கை கொள்ளத் தூண்டுகிறது. அற்புதங்கள்மீது நம்பிக்கை வைக்கும் மேஜிக்கல் திங்க்கிங் வளர்கிறது. நான் 100 தேங்காய் உடைத்தால் இது நடந்துவிடும், மலையேறி வந்தால் இது கிடைத்துவிடும் என்று நம்பத் துவங்கிவிடுகிறார்கள். இந்த நம்பிக்கை மூலம் அவர்கள் தங்கள் மனதைப் பலப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் எது குறித்தும் நேர்மறையான எண்ணங்களும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது.’
- பிருந்தா சீனிவாசன், முகம்மது ராஃபி உதவியுடன்
இணைப்பு : ஏன் வேண்டும் வழிபாடு?
மிகச் சிறப்பான கட்டுரை...
ReplyDelete