Saturday 7 June 2014

முகநூல் எதிர்-VS facebook

               முகநூலா? பேஸ்புக் [facebook ] கா? எது சரியான வார்த்தை? அண்மையில் நான் சமூக வலைத்தளமொன்றில் அவதானித்த விடயம் இது. தூய தமிழ் அல்லது தனித் தமிழில் எழுத , பேச வேண்டும்; அதனை ஊக்குவிக்க வேண்டும் என்பது சரிதான். வரவேற்கிறோம். அதற்காக கண்ணில் கண்டதை எல்லாம் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பது சரியா? தவறா?

 

                 தவறுதான் என்பது என் கருத்து.ஏனெனில் facebook, youtube மற்றும் google போன்றன வர்த்தக நாமங்கள் ஆகும். தங்கள் படைப்பு எவ்வாறு அழைக்கப்பட வேண்டுமோ அவ்வாறே தங்கள் வர்த்தக நாமத்தை உருவாக்கியுள்ளனர். இதில் நாம் தலையிட்டு நமது மொழிக் கொள்கையை திணிக்க முடியாது.

               முகநூல் என்ற வார்த்தைப் பிரயோகம் தற்போது பல தளங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. சொல்லப்போனால் தமிழாக்கம் செய்யப்பட்ட முகநூல் என்ற வார்த்தையை அனைவரும் ஏற்றுக்கொண்டாயிற்று. நானும் கூட அதில் அடக்கம். முகநூல் என்று குறிப்பிட்டதை எல்லாம் பேஸ்புக் [facebook ] என்று குறிப்பிட விழைவது சற்று சங்கடமாகவே இருக்கிறது. ஆனாலும் நாம் சரியான வழியை நோக்கித் திரும்பியாக வேண்டும். இனி வரும் காலங்களிலாயினும் தமிழாக்க ஆர்வலர்கள் பொறுப்புணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.

வாசகர்களின் ஆக்க பூர்வமான விவாதக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment