01. வாசிப்பு - இன்னுமொரு வாழ்க்கை - இன்னுமொரு உலகம் - இன்னுமொரு பிறப்பு . நமது வாழ்க்கைக்கு சுடரேற்றும் ஒளி முதல். அறிவின் ஊற்றை சுரக்க வைக்கும் அற்புத மந்திரம். ஒவ்வொரு எழுத்திலும் சொல்லிலும் நிதமும் புதுப்புது அனுபவங்களை அள்ளி வழங்குகிறது. வாருங்கள்! வாசிப்பால் ஒன்றிணைவோம்!
02. நம்மால் முடியுமா என்ற சந்தேகத்துடனேயே வலைப்பதிவில் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் உங்கள் பேராதரவு என்னை நம்பிக்கையுடன் தொடர வைத்திருக்கிறது. தங்கள் வருகை மட்டுமல்ல, கருத்துக்களும் தான் என்னை வளப்படுத்தும் என்பதால் தங்கள் மேலான கருத்துரைகளையும் வழங்கி உதவ வேண்டுகிறேன்.
03. உங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.
04. என் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.
நல்லாச் சொல்லியிருக்கிங்க சார்.
ReplyDelete
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்